கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் இந்தியாவிற்கு வழங்கப்படுகின்றதா?
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்திக்கு இந்தியாவின் உதவியை பெற்றுக் கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்திய அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
மேற்கு முனையம் இந்தியாவிற்கு விற்பனை செய்யவோ அல்லது குத்தகைக்கு வழங்கவோபடாது எனவும், இந்திய முதலீட்டுடன் அபிவிருத்தி செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபையே அபிவிருத்தி செய்ய வேண்டுமென அமைச்சரவையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கிழக்கு முனையம் நூற்றுக்கு நூறு வீதம் துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையினால் நிர்வாகம் செய்யப்பட உள்ளது.
கிழக்கு முனையத்தை இலங்கை வழங்காமை குறித்து இந்தியா அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
