குற்றப்புலனாய்வுத் துறையில் முறைப்பாட்டை பதிவு செய்த மேல் மாகாண ஆளுநர்
கொழும்பு துறைமுகத்திலிருந்து சோதனைகள் இல்லாமல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக, தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசூப் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டை செய்துள்ளார்.
இது தொடர்பாக இன்று(30) சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஆளுநர்,
தனது நற்பெயருக்கு ஏற்படும் சேதத்தை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் அமைதியாக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
பொய்யான குற்றச்சாட்டுகள்
கடந்த சில நாட்களாக, தம்மீது ஆதாரமற்ற மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகின்றன.

இது தொடர்வதை அடுத்து, இனியும் தாங்கிக் கொள்ள முடியாமல் இன்று குற்றப்புலனாய்வுத்துறையில் முறையிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியடைந்த சில குழுக்கள் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளைச் சொல்லும்போது, தாம் இனியும் அமைதியாக இருக்க முடியாது.
என்றும் மேல் மாகாண ஆளுநர் என்ற முறையில் தமது நற்பெயருக்கு ஏற்படும் சேதத்தை தம்மால் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் ஆளுநர் ஹனிஃப் யூசூப் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு