மேற்கிந்திய தீவுகள் வீரருக்கு விதிக்கப்பட்ட அபராதம்
பிரிட்ஜ்டவுனில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலக டெஸ்ட் செம்பியன்சிப் தொடரின் முதல் போட்டியின் ஆரம்ப நாளில், மேற்கிந்திய தீவுகள் அணி வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சர்வதேச கிரிக்கட் பேரவையின் நடத்தை விதிகளின் நிலை 1 ஐ மீறியதற்காக மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் இற்கு போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஸ் அணிக்கு எதிரான போட்டி
சர்வதேச போட்டியின் போது ஒரு துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்தவுடன், அவரை இழிவுபடுத்தும் அல்லது ஆக்ரோசமான எழுப்பப்படும் மொழி அல்லது செயல்கள் அல்லது சைகைகளைப் பயன்படுத்துதல் தொடர்பான விதிகளின் படியே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மாத காலத்தில் ஜெய்டன் சீல்ஸ் செய்த இரண்டாவது குற்றமாக இது அமைந்துள்ளது.
ஏற்கனவே 2024 இல் பங்களாதேஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது சீல்ஸ் தண்டிக்கப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று அவுஸ்திரேலியாவின் இன்னிங்ஸின்போது, சீல்ஸ், அந்த அணியின் தலைவர் பெட் கம்மின்ஸை வெளியேற்றிய பிறகு, வீரர்களின் ஓய்வு அறையை நோக்கி சைகை செய்து, கிரிக்கெட் பேரவையின் விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri
