மோசடியான முறையில் டுபாய்க்கு சென்ற இலங்கையர்கள் நிர்க்கதி
வாகன சாரதி தொழிலுக்கு தகுதியில்லாத சிலர், வாடகை சிற்றூந்து நிறுவனமொன்றில் சாரதிகளாக சேரும் வகையில் மோசடியான முறையில் டுபாய்க்கு சென்று நிர்க்கதியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அங்கு வாகன சாரதி பரீட்சையில் சித்தியடைய முடியாமல் அவர்கள்
பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மோசடி முறை
200 இலங்கையர்கள் இந்த மோசடி முறையின் கீழ் டுபாய் சென்றுள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குழுவில் உள்ள சிலர் தேவையான திறன்கள் இல்லாமல் மோசடியாக அங்கு சென்றுள்ளனர். இன்னும் சிலர் சாரதி தேர்வில் தேவையான திறமைகளை பெற்றிருந்தும் டுபாயில் தோல்வியடைந்தனர்.
அதேநேரம் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் திரும்பி வர விரும்புகிறார்கள் என்று கூறிய அமைச்சர் அவர்களை திரும்ப அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.