வெலிகம லசா விவகாரம்.. வெளியான காணொளியால் பெரும் சிக்கலில் அதிகாரிகள்!
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்ததில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் குறித்து சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது.
கைது செய்யப்பட்டவரின் காணொளி காட்சிகளைப் பதிவுசெய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஏஎஸ்பி எஃப்யூ வூட்லர் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு நடவடிக்கை..
மேலும், இந்த விடயத்தில் பொலிஸ் மா அதிபர் சிறப்பு கவனம் செலுத்தி, சிறப்பு புலனாய்வுப் பிரிவின் கீழ் விசாரணை நடத்த அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கில் ஒரு சந்தேக நபரை முன்னிலைபடுத்துவது, நீதிமன்ற நடவடிக்கைகளையும் பாதிக்கப்பட்ட தரப்பினரையும் பாதிக்கக்கூடும் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி ஒக்டோபர் 26ஆம் திகதி அன்று மஹரகம, நாவின்ன பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri