வடக்கில் அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டவருக்கு ஆசிரியர் இடமாற்றம்
வட மாகாணம் கிளிநொச்சி வலயம் ஒன்றில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபராக அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட ஒருவருக்கு ஆசிரியர் இடமாற்ற பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவது, ஏற்கனவே அதிபர் பட்டியலில் உள்ளீர்க்கப்பட்ட ஒருவரை 2026 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் வகையில் வட மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இடமாற்றப்பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரிய இடமாற்றத்தில் முறைகேடுகள்
குறித்த ஆசிரியர் இடமாற்றத்திற்கு பெயர் பரிந்துரைக்கப்பட்ட அதிபர் இரண்டு வருடங்களுக்கு முன்பு அதிபராக கிளிநொச்சி வலயத்திற்கு சென்றுள்ள நிலையில் வருடாந்த ஆசிரிய இடமாற்றத்திலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
அண்மையில் ஆசிரிய இடமாற்றத்தில் முறைகேடுகள் இருப்பதாக வடமாக ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri