அஸ்வெசும நலன்புரி திட்டம்! வரிசையில் நின்றவர் மயங்கி விழுந்து மரணம்
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான விண்ணப்பப்படிவம் பெற காத்திருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பதுளையில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை எல்ல பிரதேச செயலக பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் நமுனுகுல - தன்னக்கும்புர பகுதியைச் சேர்ந்த ராமையா குழந்தைவேலு (வயது 76) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வரிசையில் காத்திருந்தவருக்கு ஏற்பட்ட நிலை
குறித்த நபர் அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான விண்ணப்பப்படிவம் பெற பிரதேச செயலகம் முன்பாக வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
எனினும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தற்போது அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கும் பணிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
