அமைச்சர் பதவியால் ஏமாற்றமடைந்துள்ள சரத் வீரசேகர? சிங்கள ஊடகம் தகவல்
நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, சரத் வீரசேகர பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சரத் வீரசேகர தனக்கு வேறு அமைச்சுப் பொறுப்பை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோர பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், அவருக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று வட்டாரங்கள் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரத் வீரசேகரவிடம் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஒப்படைத்தபோது, அதில் ஐந்து நிறுவனங்கள் இருந்தன, தற்போது அவற்றில் மூன்று நிறுவனங்கள் அவரிடம் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
சரத் வீரசேகரவின் கீழ் இருந்த முக்கிய நிறுவனம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு ஜனாதிபதியால் திலும் அமுனுகமவிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் இரண்டு நிறுவனங்கள் சில நாட்களுக்கு முன்பு ஜனாதிபதியால் அவரது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கையகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
