ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு வாரம்
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முதன்மைப்படுத்துவதற்கான எதிர்ப்பு வாரமொன்றை பிரகடனம் செய்துள்ளது.
இன்று (20) தொடக்கம் இந்த எதிர்ப்பு வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிறந்த நாளை கொண்டாடும் கோட்டாபய ராஜபக்ச! ஜனாதிபதி செயலகத்தில் குவிக்கப்பட்டுள்ள பெருமளவான இராணுவத்தினர் |
கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுதல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுதல், சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்குதல் ஆகிய விடயங்களை முன்னிறுத்தி இந்த எதிர்ப்பு வாரம் அனுட்டிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக பொதுமக்களை தெளிவுபடுத்தும் ஊடக மாநாடு இன்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, கட்சியின் தவிசாளர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரும் இந்த ஊடக மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.