பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு களைகட்டிய வியாபாரம் (Photos)
மலையகம்
பிறக்கவிருக்கும் சுபகிருது புத்தாண்டை கொண்டாட மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு மக்கள் வருகை தந்து அத்தியவசிய பொருட்களை இன்று (13.04.2022) கொள்வனவு செய்துள்ளனர்.
புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் வியாபாரம் களைகட்டியதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பூண்டுலோயா, நோர்வூட், பொகவந்தலாவை, புஸல்லாவை, நுவரெலியா, கம்பளை மற்றும் இதர மலையக நகர் பகுதிகளில் இன்று (13.04.2022) இந்நிலைமையே காணப்பட்டது.
சில பகுதிகளில் மழைக்கு மத்தியிலும் வியாபார நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்தது. பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளதால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலேயே தாம் பண்டிகையை கொண்டாடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளது.
தமிழ் - சிங்கள புதுவருடம் நாளை வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில்,வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வவுனியா நகருக்கு வருகை தரும் மக்கள் மழைக்கு மத்தியிலும் புத்தாடைகள், இனிப்பு பொருட்கள், வெடிகள் என்பவற்றையும் மரக்கறிகளையும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இதனால் வவுனியா நகரம் சனநெரிசல் மிக்கதாகக் காணப்படுவதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளில் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மன்னார்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலையேற்றம் காரணமாக தமிழர் தாயக பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் புத்தாண்டு வியாபாரம் கலையிழந்து காணப்படுகின்றது.
மக்கள் பொருள் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் அதிகளவு ஆர்வம் காட்டாத நிலையில் டீசல் மற்றும் மண்ணெண்ணை கொள்வனவுகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையினால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலே முடங்கி காணப்படுவதும் குறிப்பிடதக்கது.









அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
