கொழும்பில் களைகட்டிய தைப்பொங்கல் வியாபாரம்! (Video)
தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. உலகில் தமிழர் வாழும் இடங்களில் தைப்பொங்கல் தினம் சிறப்பாக இடம்பெறும்.
அந்தவகையில் கொழும்பில் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளன. கொழும்பின் புறக்கோட்டையில் பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மக்கள் அனைவரும் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் பொட்ருகளை கொள்வனவு செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையிலும், கோவிட் நோய் தொற்று வேகமாக பரவ வரும் நிலையிலும், மக்கள் பொருட் கொள்வனவில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எவ்வாறாயினும், நாட்டு மக்களை சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்குமாறு சுகாதார துறையினர் கோரி வரும் நிலையில் மக்கள் அதனை கவனத்தில் கொள்ளாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam