இன்று முதல் காலநிலை சீராகும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் அறிவிப்பு
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் மழையுடனான காலநிலை இன்று(15) வெள்ளிக்கிழமை மாலை முதல் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவி வரும் குறைந்த அழுத்த மண்டலத்தின் தாக்கம் இன்று மாலை அளவில் குறைவடைவதால், அதன் பின்னர் மழையின் வீரியம் பெருமளவு தணியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மழையின் தாக்கம்
நேற்றுமுன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று மழையின் அளவில் ஓரளவு குறைவு தென்பட்ட போதிலும், நாட்டின் சில பகுதிகளில் இன்னும் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

மேல் மற்றும் சபரகமுவா மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும். தெற்கு மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழையுடனான வானிலை இன்றும் தொடரலாம்.
மத்திய மாகாணத்தின் சில இடங்களில் நேற்று 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மழையின் தாக்கம் முழுமையாகக் குறையும் வரை பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வானிலை ஆய்வுத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri