நாட்டில் இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்! வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டின் பல பாகங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் அலை
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என தெரிவி்க்கப்படுகின்றது.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam