இலங்கையின் வானிலையில் ஏற்படும் மாற்றம்
இலங்கையின் பல பகுதிகளில் நாளை (26.01.2023) மற்றும் நாளை மறு தினம் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டல திணைக்களத்தின் அறிவிப்பில் மேலும், வங்காள விரிகுடாவில் நிலவும் காலநிலை காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் வியாழன் (26) மற்றும் வெள்ளிக்கிழமை (27) பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை 28 மற்றும் 29ஆம் திகதிகளில் மழை குறைவடைவதுடன், ஜனவரி 30 மற்றும் 31ஆம் திகளில் மழை காலநிலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri