வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மழை
தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் (02) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருணாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை நேரத்தில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
