மியன்மார் மக்களுக்காக நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள நடவடிக்கை! தேரர் வெளியிட்ட அறிவிப்பு
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஏப்ரல் 11 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தானம் பெற்றுக்கொள்ளும் பயணமொன்றை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பௌத்த சாசனத்தை பாதுகாக்கும் சபை தெரிவித்துள்ளது.
பௌத்த சாசனத்தை பாதுகாக்கும் சபையின் தலைவர் தும்புல்லே சீலக்கந்த நாயக்க தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
மியன்மார் மக்களுக்கு நிவாரணம்
அத்துடன், ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாய உள்ளிட்ட பணியாளர்களும், மல்வத்து - அஸ்கிரி தரப்பினரும் மியன்மாருக்கு உதவ எதிர்பார்த்துள்ளதாக, மல்வத்து தரப்பு அனுநாயக்க திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மியன்மாரை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,700 ஐ தாண்டியுள்ளதுடன் சுமார் 4,000 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், மியன்மார் மற்றும் தாய்லாந்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளுக்குள் புதைந்து காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.
மருத்துவர் குழு
இதேவேளை, நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்நாட்டின் மருத்துவர் குழுவொன்றை மியன்மாருக்கு அனுப்புவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட தூதரகங்களிலிருந்து அறிவிக்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட மருத்துவ குழுக்கள் உடனடியாக மியன்மாருக்கு அனுப்பப்படும் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 11 மணி நேரம் முன்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
