மக்களே அவதானம்! காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம் காலநிலை மாற்றம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காணப்படும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை
இந்த அறிவிப்பு அரபிக் கடல் பகுதியில் உள்ள நெடுநாள் மீன்பிடி கடற்தொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்திற்காக வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (30) காலை 6.00 மணியளவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளமை காரணமாக அரபிக் கடல் பகுதியில் கடும் காற்று (70-80 kmph) நிலவும் என்று திணைக்களம் குறிப்பிடுகிறது.
இதனால் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
வேகமான காற்று
இதேவேளை,மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இடைக்கிடையில் மணித்தியாலத்திற்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் நுற்றுக்கணக்கானோர்... கொடுஞ்செயலுக்கு திட்டமிட்ட இருவர்: விரிவான பின்னணி News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam