மொட்டுக் கூட்டை உடைத்தார் ரணில்! ஏழு பங்காளிகள் அவர் பக்கம் தாவல்

Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna
By Rakesh Jun 30, 2024 12:50 AM GMT
Report

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ராஜபக்சக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து பயணித்த கூட்டணி வைத்திருந்த ஏழு பங்காளிக் கட்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe)  வளைத்துப் போட்டுள்ளார்.

அரசியலில் கோலோச்சியிருந்த காலப்பகுதியில் உறுப்பினர்களை விலைக்கேனும் வளைத்துப் போட்டு கட்சிகளை இரண்டாக உடைப்பது, பிளவுபடுத்துவது ராஜபக்சக்களுக்குக் கைவந்த கலையாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தார்கள், ஜே.வி.பியைப் பிளவுபடுத்தினார்கள்.

சிறீதரன் எம்.பியின் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்களின் பின்னணி குறித்து வெளியான தகவல்

சிறீதரன் எம்.பியின் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்களின் பின்னணி குறித்து வெளியான தகவல்

பலத்தைப் பெற்றிருந்த ராஜபக்சக்கள்

ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்கூட கை வைத்தார்கள். உள்ளூராட்சி சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என ஹாட்ரிக் வெற்றியுடன் நாடாளுமன்றத்திலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருந்த ராஜபக்சக்கள் அணி, தற்போது அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ளது.

இந்நிலையில் அரசியல் ரீதியில் தாம் அநாதைகளாக்கப்படாமல் இருப்பதற்கு அவர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

மொட்டுக் கூட்டை உடைத்தார் ரணில்! ஏழு பங்காளிகள் அவர் பக்கம் தாவல் | Ranil Broke The Sri Lanka Podujana Peramuna

ஆனால், ராஜபக்சக்கள் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்கவும், தம்மைப் பலப்படுத்திக்கொள்வதற்காகவும் அவ்வப்போது ஏவிய அரசியல் அஸ்திரங்களை ஜனாதிபதி ரணில்  தற்போது ஏவி வருகின்றார்.

அந்தவகையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மொட்டுக் கட்சியுடன் இணைந்து பயணித்த – கூட்டணி வைத்திருந்த ஏழு பங்காளிக் கட்சிகளை ஜனாதிபதி ரணில் வளைத்துப் போட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் ஆதரிக்கப்போவதாக மேற்படி கட்சிகள் பகிரங்கமாக அறிவித்துள்ளன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி (கருணா), முற்போக்கு தமிழர் கழகம் (வியாழேந்திரன்), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (நிமல் சிறிபாலடி சில்வா அணி) என்பனவே ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன.

கச்சதீவில் சில செயற்பாடுகளை இந்தியா முன்னெடுக்க இலங்கை இடம் கொடுத்துள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்

கச்சதீவில் சில செயற்பாடுகளை இந்தியா முன்னெடுக்க இலங்கை இடம் கொடுத்துள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்

அரசியல் வட்டாரங்கள் 

அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பவற்றின் எம்.பிக்கள் சிலர் கூட ரணிலுடன் இரகசிய உறவு வைத்துள்ளனர்.

அதுமட்டுமல்ல மொட்டுக் கட்சியின் பிரிவொன்றையும் ஜனாதிபதி ரணில்  உடைத்தெடுத்துள்ளார். இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ரணில் பக்கம் நிற்காத பட்சத்தில் அக்கட்சி மேலும் பிளவடையும் சாத்தியம் காணப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியையும் பிளவுபடுத்துவதற்குரிய வேட்டையை ரணில்  ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்.

மொட்டுக் கூட்டை உடைத்தார் ரணில்! ஏழு பங்காளிகள் அவர் பக்கம் தாவல் | Ranil Broke The Sri Lanka Podujana Peramuna

தற்போதைய சூழ்நிலையில் சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன ஆகியோர் ரணிலுடனான உறவைப் பகிரங்கப்படுத்தி இருந்தாலும் மேலும் சிலர் திரைமறைவு உறவைப் பேணி வருகின்றனராம். அதேவேளை, மொட்டுக் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த தேசிய சுதந்திர முன்னணி, பிவிருது ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, யுத்துகம அமைப்பு என்பனவும் மொட்டுத் தரப்பை கைவிட்டு புதிய கூட்டணியை அமைத்துள்ளன.

இதனால் அரசியல் ரீதியில் மொட்டுக் கட்சி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் கூட்டணி அமைப்பதற்குரிய ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதற்கிடையில் ரணில் , ராஜபக்சக்கள் உறவு முறியுமா என்ற கேள்வி எழுகின்றது.

இன்னும் அந்தக் கட்டம் வரவில்லையென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ரணிலுக்கும், ராஜபக்சக்களுக்கும் இடையில் அடுத்த வாரம் தீர்க்கமானதொரு சந்திப்பு நடைபெறவுள்ளது.

அந்தச் சந்திப்பின் பின்னரே உறுதியான முடிவுகள் எட்டப்படும். நாடாளுமன்றம் ஜூலை 2 ஆம் திகதி கூடுகின்றது. இரு தரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் சபையில் முன்வைக்கப்பட்டு, விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு

இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு

கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலைய ஒப்பந்தத் தொழிலாளிகள் சிறீதரன் எம். பியிடம் கோரிக்கை

கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலைய ஒப்பந்தத் தொழிலாளிகள் சிறீதரன் எம். பியிடம் கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 























































































































































































































































































































































































































































































இதன்போது பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஜனாதிபதி முற்படுகின்றார். அதற்கான நகர்வுகளும் ஆரம்பமாகியுள்ளன. எனவே, இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரும் முக்கியத்துவம்மிக்கதாகக் கருதப்படுகின்றது.

மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

28 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

30 Apr, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், Auckland, New Zealand

29 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Nienburg, Germany

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US