கடல் அலைகள் நிலத்திற்குள் வரும் வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகள், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களில், மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, கவனம் தேவைப்படும் அளவில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பொதுமக்கள் முடிந்தவரை அதிக நீர் அருந்தவும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் அலைகள் உயர வாய்ப்பு
இதற்கிடையில், புத்தளம் முதல் கொழும்பு வரையிலும், காலி மற்றும் மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2 - 3 மீட்டர் வரை உயர வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, சிலாபம் முதல் கொழும்பு வரையிலும், காலி முதல் மாத்தறை வரையிலும் உள்ள பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை அடையவும் வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கடல் பகுதிகளில் கடற்தொழிலாளர்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.