ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல்: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு!
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் 2 வீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையில உள்ள ஈரானின் 'லராக்' தீவில் அமைந்திருந்த இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளதால் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய்க்கு 2.21 (2.51%) டொலராக உயர்ந்து தற்போது 90.31 ஆக பதிவாகியுள்ளது.
எண்ணெய் விநியோகம்
அமெரிக்க WTI மசகு எண்ணெய் பீப்பாய்க்கு 1.83 (2.19%) டொலராக உயர்ந்து தற்போது 85.23 டொலராக ஆக பதிவாகியுள்ளது.
மேலும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தால் எதிர்வரும் நாட்களில் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலைக்குப் பிறகு ஈரானிய எல்லைக்குள் அமெரிக்கா நடத்திய முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும்.
ஈரானும் இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் 6ஆவது மாதமாகத் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் விவசாய குளங்களை அழிப்பதை உடன் நிறுத்தி குடிநீருக்கு தனி நீர் திட்டம் அமைக்கவும் - விவசாயிகள் கோரிக்கை
YOU MAY LIKE THIS VIDEO..
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri