உலகம் அழியப்போவதாக எண்ணி கனேடியர் செய்த செயல்! கிடங்கிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள்
கோவிட் தொற்றால் உலகம் அழியப்போவதாக எண்ணி கனேடியர் ஒருவர் வெடிகுண்டுகளையும், துப்பாக்கிகளையும் வாங்கி குவித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Kamloops என்ற இடத்தைச் சேர்ந்தவர் Brett Haynes (45) நகரில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கூட்டம் ஒன்றிற்கு சொந்தமான கிடங்கினை பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.
இதன்போது அந்த கிடங்குக்குள் பல வகை துப்பாக்கிகள், துப்பாக்கிக் குண்டுகள், வெடி பொருட்கள் முதலானவை கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆயுதங்கள் வைத்திருக்க Brett என்பவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கிடங்கு ஒன்றில் இவ்வளவு ஆயுதங்களை சேமித்து வைத்திருந்ததால் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரின் சட்டத்தரணி, தனது கட்சிக்காரருக்கு மன நலப் பிரச்சினை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட அவர், உலகம் அழியும் போது காட்டுக்குச் சென்று அங்கிருக்கும் ஒரு பாழடைந்த வீடு ஒன்றில் தங்கிக்கொள்ளும் நோக்கில் ஆயுதங்களை சேகரித்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அவர் 30 மாதங்கள் சிறையிலிருந்துள்ளதுடன், தற்போது இரண்டு ஆண்டுகள் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
