ஏறாவூரில் பாடசாலை காணியில் ஆயுதங்கள்: அகழ்வு பணியில் அம்பலமான பொருட்கள்
மட்டக்களப்பு - ஏறாவூர் ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்துள்ள காணியில் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அகழ்வுப் பணி, இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, நீதிமன்ற உத்தரவை பெற்று இன்று(09.09.2025) தொடங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் லியனகே தலைமையில் ஏறாவூர் ஓட்டுபள்ளிவாசல் குறுக்கு வீதியில் பள்ளிவாசலுக்கு பின்பகுதியில் உள்ள முன்னாள் அகமட் பரீட் வித்தியாலய பகுதியில் இடம்பெற்ற இந்த அகழ்வுப் பணிகள் நடாத்தப்பட்டுள்ளன.
இந்த அகழ்வுப் பணி, விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் ஆகியோரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.
அகழ்வுப் பணிகள்
இதன்போது, அங்கு ஒரு பிளாஸ்டிக் வாளியில் பொதி செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் 4 ஜே.ஆர் ரக கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மேலும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, அகழ்வுப் பணி நிறுத்தப்பட்டதுடன் மீட்கப்பட்ட கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையின் கொண்டு சென்று சோதனையின் பின்னர் அதனை அழிக்க வேண்டுமா என தீர்மானித்த நிலையில், அது தொடர்பாக நீதிமன்றிற்கு அறிக்கை சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல் - குமார்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam