மிகப் பலவீனமான ஆட்சியை முன்னெடுக்கும் அநுர : சஜித் பகிரங்கம்

Anura Kumara Dissanayaka Sajith Premadasa IMF Sri Lanka Economy of Sri Lanka Local government Election
By Rakesh Feb 15, 2025 01:21 PM GMT
Report

அண்மைக்கால வரலாற்றில் உருவான மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில் காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று (14) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், "பத்து பிரதான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தமது வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளது. அவை மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும்.

யாழில் விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்.பி

யாழில் விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்.பி

பொருளாதார வளர்ச்சி

இன்று, நாடு பயணிக்கும் பாதை தெளிவாகத் தெரிகின்றது. வலுவான அரசுக்குப் பதிலாக, வரலாற்றில் மிகவும் தோன்றிய மிகவும் பலவீனமான அரசே இங்கு காணப்படுகின்றது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரிசையாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

நாட்டில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் வெளிப்படையான கொள்முதல் முறைகளின்படி இடம்பெற வேண்டும். முதலீட்டாளர்களை அரசு தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

மிகப் பலவீனமான ஆட்சியை முன்னெடுக்கும் அநுர : சஜித் பகிரங்கம் | Weak Government In Sri Lanka Sjb Sajith

2028 ஆம் ஆண்டளவில் நாம் கடனைச் செலுத்த வேண்டும் என்பதால் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

நாடு செலுத்த வேண்டிய கடனையும் வட்டியையும் செலுத்த வேண்டுமானால் அரசு அதிக வருமானத்தையும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி இலக்குகளையும் அடைய வேண்டும். இவ்வாறு நடக்கும் பட்சத்தில் ஒரு நாடாக எம்மால் மீண்டு வர முடியும். இவ்வாறே சென்றால் இன்னுமொரு கடன் மறுசீரமைப்பிற்குச் செல்ல வேண்டி வரும்.

அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட இணக்கப்பாடு மற்றும் சர்வதேச பிணை முறி பத்திரதாரர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து ஆராயும் பொருளாதார வல்லுநர்கள், அவர்களுடன் செய்து கொண்டுள்ள இணக்கப்பாடுகளின் இலக்குகளை நாம் அடையாவிட்டால், மற்றொரு கடன் மறுசீரமைப்புக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த இணக்கப்பாடுகளில் காணப்படும் பலவீனங்களை ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியதுடன் கடந்த அரசு செய்த தவறுகளை இந்த அரசும் முன்னெடுத்து வருகின்றது. பல நிபுணர்கள் ஐ.எம்.எப். ஒப்பந்தங்களை ஆய்வு செய்துள்ளனர்.

அவர்களது பகுப்பாய்வுகளின் பிரகாரம், ஐ.எம்.எப். உடன்படிக்கைக்கு வந்த 59 வீத நாடுகள் இரண்டாவது அல்லது மூன்றாவது மறுசீரமைப்புக்குச் சென்றுள்ளன என வெளிப்படுத்தியுள்ளனர்.இது இங்கு வெளிப்படுத்தப்படுவதில்லை.

அநுரவிற்கு சிக்கலை ஏற்படுத்தப் போகும் சவேந்திர சில்வாவின் முடிவு

அநுரவிற்கு சிக்கலை ஏற்படுத்தப் போகும் சவேந்திர சில்வாவின் முடிவு

உள்ளூராட்சி சபைத் தேர்தல்

மற்றொரு கடன் மறுசீரமைப்பை நாடுவது நாட்டுக்கு ஒரு பேரழிவாகும். குறுகிய பிரச்சினைகளை இலக்கு வைத்து ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் ஆதாயம் தேடாது. நாடு குறித்து சிந்தித்தே செயற்பட்டு வருகின்றோம். இந்தத் தரவுகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

2020 பெப்ரவரியில் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கட்சியாக ஆரம்பிக்கப்பட்டது. 7 மாதங்களுக்குப் பிறகு, நாம் ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொண்டோம்.

மிகப் பலவீனமான ஆட்சியை முன்னெடுக்கும் அநுர : சஜித் பகிரங்கம் | Weak Government In Sri Lanka Sjb Sajith

சுதந்திர ஜனநாயக வரலாற்றில் குறுகிய காலத்தில் ஒரு கட்சியாகப் போட்டியிட்டு அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களையும் வாக்குகளையும் வென்றெடுத்தோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டோம். தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் வந்துள்ளது. இதனை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்.

கட்சிக்கென்று எந்த உறுப்பினர்களும் இல்லாதே கடந்த மூன்று தேர்தல்களிலும் எமது கட்சி பேட்டியிட்டது. அப்போது இருந்த ஐ.தே.க. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மிகுந்த நம்பிக்கையோடு ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தனர். அவர்களில் 74 பேர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பதவி பறிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியினது அல்லது தொலைபேசி சின்னத்தினது பயணமென்பது தற்காலிகமான பயணமல்ல. இது நெடுந்தூர பயணம் என்றார்.

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Ashford, United Kingdom

04 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

08 Aug, 2022
மரண அறிவித்தல்

பத்தமேனி, மட்டக்களப்பு, Toronto, Canada

04 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

06 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US