இந்த அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம்: எதிரணி எம்.பி. தயாசிறி சபதம்
நாடு பூராகவும் அரசுக்கு எதிரான கூட்டங்களை நடத்தி, மக்களை அணிதிரட்டி தற்போதைய அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்று முன்னாள் அமைச்சரும் எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "ஊழலை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, ஊழலையே முன்னிலைப்படுத்திச் செயற்படுகின்றது.
ஆட்சிக்கு வந்து சில மாதங்களில் எவ்வித பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் இதுவரையில் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை.
செயற்பாடுகள்
சுங்கச் சட்டத்தை மீறி விடுவிக்கப்பட்ட இந்தக் கொள்கலன்கள் குறித்து இந்த அரசில் இருப்பவர்கள் ஒரு காலத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

மறுபுறம், ஒருசில பௌத்த பிக்குகளின் முறையற்ற செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி, ஒட்டுமொத்த புத்த சாசனத்தையும் மலினப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
புத்தசாசனத்தை இல்லாதொழித்து இலங்கையை மதசார்பற்ற நாடாக மாற்றும் செயற்பாடுகளுக்கே அரசு முன்னுரிமையளித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இலங்கையின் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை பறைசாற்றும் வரலாற்று விடயங்கள் பாடப்புத்தகங்களில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளன.

அதேபோல், இந்தியாவுடன் அரசு செய்துகொண்ட பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இதுவரையில் நாடாளுமன்றத்துக்குக்கூட வெளிப்படுத்தப்படவில்லை.நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசு தன்னிச்சையான முடிவுகளையே எடுக்கிறது.
மேலும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலேயை, நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவரைப் போன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தி வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam