அடுத்த தேர்தலில் அநுர அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்போம்: அடித்துக் கூறுகின்றது ஐக்கிய மக்கள் சக்தி

Colombo Anura Kumara Dissanayaka R M Ranjith Madduma Bandara Samagi Jana Balawegaya
By Rakesh Jul 17, 2025 04:38 AM GMT
Report

மக்கள் வழங்கிய ஆணையை உதாசீனம் செய்யும் வகையில் அநுர அரசு செயற்படுகின்றது, எதிர்வரும் தேர்தலில் இந்த அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார். 

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு நேற்று வழக்கு விசாரணைக்காகச் சென்றதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

திணறும் இராணுவ புலனாய்வு! பிள்ளையானுடன் சிக்கப் போகும் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே

திணறும் இராணுவ புலனாய்வு! பிள்ளையானுடன் சிக்கப் போகும் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே

ஊழல் எதிர்ப்பு

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், திருடர்களைப் பிடிப்பதற்கும், ஊழல் - மோசடிகளை இல்லாதொழிப்பதற்கும் நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஊழல் எதிர்ப்புக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். ஊழல் என்று குறிப்பிட்டுக் கொண்டு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை அச்சுறுத்துவதாயின் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவே நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.

ranjith sajith

நீதிமன்றம் சுயாதீமான முறையில் செயற்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. ஊழல்வாதிகளைப் பிடிப்பதாக இந்த அரசு தேர்தல் பரப்புரை மேடைகளில் குறிப்பிட்டது. பல பில்லியன் ரூபா மோசடி செய்தவர்கள் உள்ளார்கள். அந்த வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்களை முடக்குவதாகக் குறிப்பிட்டார்கள், உகண்டாவில் இருந்து நிதியைக் கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்கள். ஆனால், இன்று அவற்றை மறந்து விட்டு பிரதான எதிர்க்கட்சியை முடக்கும் செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடுகின்றார்கள்.

சைக்கிள் கட்சி உறுப்பினருக்கு யாழ்.மேயர் கடும் எச்சரிக்கை

சைக்கிள் கட்சி உறுப்பினருக்கு யாழ்.மேயர் கடும் எச்சரிக்கை

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் செயற்பாடு

நாடாளுமன்றத்துக்குள்ளும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளை அரசு பெரும்பான்மைப் பலத்தை வைத்துக் கொண்டு மேற்கொள்கின்றது. அரசின் முறைகேடான செயற்பாடுகளை வெளிப்படுத்தும் போது அந்த முறைகேடுகள் குறித்து ஆராயாமல் முறைப்பாடுகளை முன்வைக்கும் தரப்பினர் இன்று இலக்கு வைக்கப்படுகின்றார்கள்.

ranjith madduma bandara

உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளை ஸ்தாபிக்கும் போது கட்சியின் கொள்கை மற்றும் தீர்மானங்களுக்கு எதிராகச் செயற்பட்ட கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு எமது கட்சி ஒத்துழைப்பு வழங்குவதாக ஒருபோதும் தீர்மானிக்கவில்லை.

எதிர்வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் நாங்கள் எவ்வாறு தேசிய மக்கள் சக்திக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளதால், எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அரசு தீவிர அவதானம் செலுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

கெரி ஆனந்த சங்கரி மீது பூரண நம்பிக்கை உண்டு – கனடிய பிரதமர்

கெரி ஆனந்த சங்கரி மீது பூரண நம்பிக்கை உண்டு – கனடிய பிரதமர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US