கொழும்பு தேசிய வைத்தியசாலை செல்வோருக்கு எச்சரிக்கை
கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம் பாதுகாப்பு கொண்ட பகுதியான போதிலும் திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வைத்தியசாலை வளாகத்தில், நடிகை தமயந்தி பொன்சேகாவின் கைப்பையைத் திருடர்கள் மிக நுணுக்கமாகத் திறந்து, உள்ளே இருந்த பணம் மற்றும் வங்கி அட்டைகளை இன்று (15) திருடிச் சென்றதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எச்சரிக்கை
குறித்த சம்பவமானது, தமயந்தி பொன்சேகா வைத்தியசாலையின் மேல் தளத்திற்கு மருத்துவரைப் பார்க்கச் சென்று போது நடந்துள்ளது.திருட்டு நடந்த நேரத்தில் லிஃப்டில் மக்கள் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
திருடன் கவனமாகக் கைப்பையிலிருந்த பணம் மற்றும் வங்கி அட்டைகளைத் திருடிச் சென்றுள்ளான்.தேசிய அடையாள அட்டையும் களவாடப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற செலவுகளுக்குப் பணம் செலுத்துவதற்காக சில சந்தர்ப்பங்களில் நகைகளை அடகு வைத்து பணம் எடுத்து பாமர மக்களின் பணத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு வைத்தியசாலை அதிகாரிகளுக்கு உள்ளது என்றும் தமயந்தி பொன்சேகா தெரிவித்துள்ளார்.





படம் இல்லை ரூ. 100 கோடிக்கு மேலான செலவில் அட்லீ இயக்கும் விளம்பரம்... பிரம்மாண்டத்தின் உச்சம் Cineulagam

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri
