வீரியமிக்க கோவிட்டின் புதிய திரிபு: தடுப்பூசி குறித்து பைசர் நிறுவனம் தெரிவித்துள்ள விடயம்
கோவிட்டின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸிற்கு எதிராக 100 நாட்களில் புதிய கோவிட் தடுப்பூசியைத் தயாரித்து அனுப்புவோம் என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசியின் ஆய்வு தொடர்பாக பைசர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வீரியமிக்க ஒமிக்ரோன் கோவிட் வைரஸ் கண்டறியப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய வகை கோவிட்டுக்கு எதிராகத் தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என பரவலாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒமிக்ரோன் வைரஸ் அச்சத்தால் உலக நாடுகள் பல பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இதேவேளை தற்போதுள்ள தடுப்பூசிகள் புதியவகை ஒமிக்ரோன் ரக கோவிட் வைரஸிலிருந்து பாதுகாக்குமா? என்பது குறித்து அந்தந்த தடுப்பூசி நிறுவனங்கள் தீவிர ஆராய்ச்சியில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri