அமெரிக்கா எதிர்பார்க்காத பல அதிர்ச்சிகரமான ஆச்சரியங்களுடன் ஈரான் தயாராகவுள்ளது! வெளியான எச்சரிக்கை
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளத் தவறினால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், ஈரான் அதற்குத் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
"நாங்கள் ஒருபோதும் சரணடையப் போவதில்லை; எங்களை எவரும் முற்றுகையிட முடியாது" என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரான் எச்சரிக்கை
மீண்டும் போர் வெடிக்கும் பட்சத்தில், அமெரிக்கா எதிர்பார்க்காத பல ‘அதிர்ச்சிகரமான ஆச்சரியங்களை’ ஈரான் தயார் செய்து வைத்துள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் முக்கிய இராணுவத் தலைமையகமான 'காதம் அல்-அன்பியா' (Khatam al-Anbiya), சாத்தியமான தாக்குதல்களை எதிர்கொள்ளத் தங்களது படைகள் முழுத் தயார் நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது.

ஈரானின் நீதித்துறை உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள், அமெரிக்காவின் தாக்குதல் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன், சரணடைவதை விட எதிர்த்து நிற்பதே ஈரானின் கொள்கை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த நேரடி மோதல் போக்கு சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam