குண்டுகள் வெடிக்கும் ட்ரம்ப் எச்சரிக்கை! புதிய வியூகங்களுடன் தயாராக இருப்பதாக ஈரான் பதிலடி

Donald Trump United States of America Iran Middle East
By Shadhu Shanker Apr 21, 2026 04:56 AM GMT
Report

டொனால்ட் ட்ரம்ப் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் “குண்டுகள் வெடிக்கத் தொடங்கும்” என்று கடுமையாக எச்சரித்துள்ள நிலையில், ஈரான் புதிய வியூகங்களுடன் தயாராக உள்ளோம் என்று பதிலளித்துள்ளது.

இந்த வாரம் பாகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்கா–ஈரான் இரண்டாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தையின் எதிர்காலம் இன்னும் உறுதியற்ற நிலையில் உள்ளது.

ஈரான் துறைமுகங்களில் அமெரிக்காவின் முற்றுகை! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

ஈரான் துறைமுகங்களில் அமெரிக்காவின் முற்றுகை! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

 போர் நிறுத்தம்

கடந்த வார இறுதியில் ஹோர்மூஸ் அருகே ஈரான் கொடி ஏந்திய கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து, தெஹ்ரான் தரப்பில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் இருக்கலாம் என எச்சரித்துள்ளனர்.

தெஹ்ரான் மற்றும் வோஷிங்டன் இடையிலான இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் புதன்கிழமை முடிவடைய உள்ளது. இது நீட்டிக்கப்படும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

குண்டுகள் வெடிக்கும் ட்ரம்ப் எச்சரிக்கை! புதிய வியூகங்களுடன் தயாராக இருப்பதாக ஈரான் பதிலடி | Trump Warns Bombs Will Go Off If No Deal

இதற்கிடையில், அமெரிக்கா துறைமுகத் தடையை விதித்து, போர் நிறுத்தத்தை மீறியதன் மூலம் பேச்சுவார்த்தை மேசையை “சரணடையும் மேசையாக” மாற்ற முயற்சிக்கிறது அல்லது மீண்டும் போர் சூழலை உருவாக்க முயல்கிறது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

Mohammad Bagher Ghalibaf, அமெரிக்காவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் ஈரானின் முக்கிய பேச்சுவார்த்தை தலைவராக இருப்பவர், X தளத்தில் வெளியிட்ட பதிவில்: “அச்சுறுத்தலின் நிழலில் நடைபெறும் பேச்சுவார்த்தையை நாங்கள் ஏற்க மாட்டோம்.

கடந்த இரண்டு வாரங்களில் போர்க்களத்தில் புதிய அட்டைகளை காட்டத் தயாராகியுள்ளோம், என்று தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடன் போர் மீண்டும் தொடங்கினால், தெஹ்ரானிடம் “புதிய அட்டைகள்” உள்ளன என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நான் தான் பொறுப்பில் இருக்கிறேன்! அமெரிக்க ஊடகங்களை கடுமையாக சாடிய ட்ரம்ப்

நான் தான் பொறுப்பில் இருக்கிறேன்! அமெரிக்க ஊடகங்களை கடுமையாக சாடிய ட்ரம்ப்

ஹோர்முஸ் பிரச்சினை 

போருக்கு முடிவு காண பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்காவும் ஈரானும் தெரிவித்திருந்தாலும், Strait of Hormuz மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

உலகளாவிய எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு மிக முக்கியமான இந்த கடற்பாதை, தற்போது அமைதி பேச்சுவார்த்தையின் மையப் பிரச்சினையாக மாறியுள்ளது.

 ட்ரம்ப் நிர்வாகம், இந்த வாரம் பாகிஸ்தானில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்க பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்துள்ளது.

குண்டுகள் வெடிக்கும் ட்ரம்ப் எச்சரிக்கை! புதிய வியூகங்களுடன் தயாராக இருப்பதாக ஈரான் பதிலடி | Trump Warns Bombs Will Go Off If No Deal

முதலில், இஸ்லாமாபாத்தில் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ட்ரம்ப் கூறியிருந்தாலும், அந்த திகதி மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வேன்ஸ் தலைமையிலான குழுவில், மத்திய கிழக்கு சிறப்பு தூதர் Steve Witkoff மற்றும் ட்ரம்பின் மருமகன் Jared Kushner ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.

பேச்சுவார்த்தை குறித்து நிலவும் நிச்சயமின்மையின் மத்தியில், ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். PBS News-க்கு பேசிய அவர், “போர் நிறுத்தம் முடிவடைந்து முன்னேற்றம் ஏதும் இல்லாவிட்டால், பல குண்டுகள் வெடிக்கத் தொடங்கும் என்று கூறினார்.

உலகமே உற்றுநோக்கும் அமைதி பேச்சுவார்த்தை! இன்னும் முடிவெடுக்கவில்லை என ஈரானின் அதிரடி அறிவிப்பு

உலகமே உற்றுநோக்கும் அமைதி பேச்சுவார்த்தை! இன்னும் முடிவெடுக்கவில்லை என ஈரானின் அதிரடி அறிவிப்பு

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை

மேலும்,அவர்கள் அங்கே இருக்க வேண்டும். நாங்களும் அங்கே இருக்க ஒப்புக்கொண்டோம். அவர்கள் வராவிட்டாலும் அது சரி,என்றும் தெரிவித்தார்.

The Washington Post-க்கு பெயர் வெளியிட விரும்பாத ஈரான் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, ட்ரம்பின் பொது அறிக்கைகளின் கடுமையான தொனியும், அமெரிக்காவின் தொடர்ச்சியான துறைமுகத் தடையும், பேச்சுவார்த்தைக்கு மிகப்பெரிய தடைகளாக உள்ளன.

குண்டுகள் வெடிக்கும் ட்ரம்ப் எச்சரிக்கை! புதிய வியூகங்களுடன் தயாராக இருப்பதாக ஈரான் பதிலடி | Trump Warns Bombs Will Go Off If No Deal

இரு தரப்பும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சங்களில் பெரும்பாலும் ஒத்துழைப்பை எட்டியிருந்தாலும், ட்ரம்பின் “அதிகபட்ச கோரிக்கைகள்” தூதரக முன்னேற்றத்தை பாதிக்கக்கூடும் என்று அவர் கூறினார்.

பாகிஸ்தானின் நடுவர் தரப்பும் இதேபோன்ற கருத்தை அமெரிக்க நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் “இரு தரப்புக்கும் வெற்றி” என்ற தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US