தமிழருக்கு ஒருபோதும் அநீதி இழைக்கமாட்டோம்! - மாவையிடம் சமல் உறுதி

chamal rajapaksa mavai senadhiraja
By Rakesh May 09, 2021 03:30 AM GMT
Report

 மகாவலி அதிகார சபை விவகாரத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படாது என்று அமைச்சர் சமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

முல்லைத்தீவில் மகாவலி அதிகார சபைக்கு எட்டு கிராமசேவகர் பிரிவுகள் கையளிக்கப்படுவது பற்றியும், கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச சபை தரமிறக்கப்பட்டது பற்றியும் சமல் ராஜபக்சவுடன் நேற்று தொலைபேசியில் கலந்துரையாடியமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அமைச்சர் சமல் ராஜபக்சவிடம் மகாவலி அதிகார சபை பகிர்ந்தளிப்பது தொடர்பில் தமிழ்ப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவ்வாறு கையளிப்பதைத் தடைசெய்வதாக அறிவித்திருந்தார்.

இதற்கு மாறாக நாமல் ராஜபக்ச அப் பிரதேசங்களை மகாவலி அதிகார சபையிடம் கையளிக்க வருகின்றார் என்ற செய்திகள் வந்திருப்பது பற்றி அமைச்சருடன் பேசியபோது, அவ்வாறு நடைபெறாது என வாக்குறுதி வழங்கியுள்ளார்.

அமைச்சர் குறிப்பிட்டதாவது அப்பிரதேசங்களில் நவீன முறையில் நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்காகவே முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது நான் எமது மக்கள் அப்பிரதேசங்களில் மகாவலி அபிவிருத்திச் சபை நீர்ப்பாசன நடவடிக்கைகளின்போது தென்னிலங்கையிலிருந்து பெரும்பான்மை இனத்தவர்களைக் குடியேற்றி அப்பிரதேசங்களின் இனக்குடிப்பரம்பலைச் சீர்குலைக்க முயற்சிக்கப்படும் என்ற மக்களின் அச்சத்தைக் குறிப்பிட்டேன்.

அமைச்சர் அவ்வாறு நடைபெற, தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்க இடமளிக்கப்படாது என்றும், தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடம் இவ்விடயம் பற்றிப் பேசித் தீர்மானிப்பேன் என்றும் குறிப்பிட்டார். கல்முனை வடக்கு தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் முழுமையான தரமுள்ள பிரதேச செயலகம் நிறுவ கடந்த அரசுக் காலத்தில் அமைச்சரவைப் பத்திரமே தயாரிக்கப்பட்டது.

இதற்காக நீண்டகாலமாகவே கல்முனைத் தமிழ் மக்கள் போராடி வருகிறார்கள். இப்போது ஏற்கனவே இருந்த நிலையிலிருந்து தரமிறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடன் அமைச்சர் என்ற வகையில் அண்மையில் முறையிடடுள்ளனர் என மாவை சேனாதிராஜா அமைச்சரிடம் பேசியபோது, அவ்விடயத்திலும் தமிழ், முஸ்லிம் பிரதிகளுடன் பேசி நீதியான தீர்வை எட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சமல் ராஐபக்ச உறுதிபடத் தெரிவித்தார்" - என்றார்.  

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US