நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிகரமாக எதிர்கொள்ளப்படும்: ஆளும் கட்சி திட்டவட்டம்
சபாநாயகர் அசோக ரன்வலவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்தால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தயார் என ஆளும் கட்சி தெரிவித்துள்ளது.
ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கொண்டுவர உத்தேசித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை
தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எவ்வாறான பதில் கிடைக்கும் என்பது பற்றி கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சபாநாயகரின் கூற்றினை கருத்திற் கொண்டு செயற்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கு இது பொருத்தமான காலம் கிடையாது என பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்க்கட்சிகள் கொண்டு வருவதாக கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam

அமெரிக்காவுடன் மோதல்... எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறிவைக்கும் சீனா News Lankasri
