நாட்டின் அபிவிருத்தியில் வவுனியா பல்கலைக்கழகம் தமது பங்களிப்பினை வழங்கும்! ரி.மங்களேஸ்வரன்

Srilanka Vavniya
By Independent Writer Jun 09, 2021 07:09 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

வவுனியா பிரதேசத்தின் அபிவிருத்தியிலும், வடமாகாண அபிவிருத்தியிலும் நாட்டின் அபிவிருத்தியிலும் வவுனியா பல்கலைகழகம் தமது பங்களிப்பினை வழங்கும் என்று யாழ்.பல்கலைகழக வவுனியா வளாக முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா வளாகம் பல்கலைகழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ள விடயம் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய நாள் ஒரு மகிழ்ச்சிகரமான நாள். எதிர்வரும் 8 ஆம் மாதத்தில் இருந்து வவுனியா வளாகமானது பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியா வளாகமானது 1991 ஆம் ஆண்டு வடமாகாண இணைந்த பல்கலைகழகமாக ஆரம்பிக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது. அதனை பல்கலைகழகமாக தரமுயர்த்துவதற்கான செயற்பாடு நீண்டகால கோரிக்கையாக இருந்தது.

இந்த கோரிக்கையானது வவுனியா வளாக சமூகத்தினராலும், வன்னிப்பிரதேச மக்களினாலும் அரசியல்வாதிகளாலும் நீண்ட காலமாக விடுக்கப்பட்டு வந்தது. அந்தவகையில் இன்று இது அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இது வவுனியா வளாக சமூகத்திற்கும் வன்னிப்பிரதேச மக்களுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான, நிகழ்வாகும். இந்த சந்தர்ப்பத்தில் அதனை தரமுயர்த்துவதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிப்பினை செய்தவர்களிற்கு நாங்கள் நன்றி கடமைப்பட்டவர்கள். அவர்களிற்கு வளாக சமூகத்தினது நன்றிகளை தெரிவித்துக்கொண்டு வன்னிப்பிரதேச மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

இது தொடர்பாக வன்னியில் உள்ள அரசியல் வாதிகளும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எமது நோக்கத்தை நிறைவு செய்வதற்கு பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ளனர். அத்துடன் ஊடகத்துறையினரும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்ப்படுத்தியிருந்தனர். அவர்களிற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த பிரதேசத்தின் அபிவிருத்தியிலும், வடமாகாண அபிவிருத்தியிலும் நாட்டின் அபிவிருத்தியிலும் கல்வி பொருளாதாரம், கலாசாரம் மென்மேலும் அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக்கொண்டு இந்த பிரதேசத்திற்கு பொருத்தமான கல்வியினையும், புதிய புதிய தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ளக் கூடிய கல்வியினை, வழங்கக்கூடிய கற்கை நெறிகளையும் புதிய பீடங்களை ஆரம்பிப்பதற்கும் நாம் திட்டமிட்டுள்ளோம்.

விரைவில் மருத்துவத்துறை சார்ந்த கல்வியினையும் வழங்குவதற்கு நாம் கருத்துக்களை பகிர்ந்துள்ளோம். நீண்ட கால கனவை நிறைவு செய்வதற்காக தோளோடு தோள் நின்று மக்கள் ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US