பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ஈரானை தாக்கி அழிப்போம்: ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ஈரானை தாக்கி அழிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு,ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் ஒன்றை எட்ட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 28 ஆம் திகதி ஈரானுக்கு எதிரான போர் ஆரம்பமானதில் இருந்து முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (26.3.2026) இடம்பெற்றபோது அதில் பங்கேற்று உரையாற்றியபோதே ட்ரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை
அதேவேளை, ஈரான் பேச்சுவார்த்தை மேசைக்கு வராவிட்டால், அமெரிக்கா அவர்களைத் தொடர்ந்து அழித்துக்கொண்டே இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

ட்ரம்ப்பின் இந்த கருத்துக்கள், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்று வரும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளின் நிலை குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.
ஈரானுக்கு இந்த உடன்படிக்கையில் விருப்பம் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறிவந்தாலும், ஈரான் அதிகாரிகள் அமெரிக்காவுடன் தாங்கள் எவ்வித பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்றே கூறி வருகின்றனர்.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri