நடுவானில் எப் 18 விமானத்தை சுட்டுவீழ்த்திய ஈரான்! அமெரிக்கா மறுப்பு
அமெரிக்காவுக்கு சொந்தமான எப் 18 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வீடியோவையும் ஈரான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளதுடன், விமானம் எங்கு வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்பது தொடர்பான எந்த தகவலையும் ஈரான் வெளியிடவில்லை.
அமெரிக்கா மறுப்பு
ஈரான் வெளியிட்ட இந்த அறிவிப்பை அமெரிக்கா உடனடியாக நிராகரித்துள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியதையடுத்து, ஈரானும் பதிலடி கொடுத்து வருகின்றது.
இரு தரப்புக்குமான போர் 25 நாட்களை கடந்துள்ள நிலையில், ஈரானுடனான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருப்பதாகவும், எனவே 5 நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
ஈரான் திட்டவட்டமாக மறுப்பு
இந்நிலையில், அமெரிக்காவுடன் எத்தகைய பேச்சுவார்த்தையிலும் தாங்கள் ஈடபடவில்லை என ஈரான் திட்டவட்டமாக மறுத்து வருகின்றது.
இந்த பின்னணியில் அமெரிக்காவுக்கு சொந்தமான எப் 18 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan