அமெரிக்க படையினரிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கத்தாரின் முடிவு
பல மட்டங்களிலான அமெரிக்காவினுடைய ஒரு தோல்விக்கான முறைமையை ட்ரம்பினுடைய முட்டாள்த்தனம் உருவாக்கிக் கொடுத்துள்ளதாக கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சிந்தனை வேறுபட்டது.மேற்கத்திய உலகத்திற்கு எதிரானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜிசிசி நாடுகளினுடைய முதன்மை நாடே சவூதி அரேபியா.இந்தநிலையிலே குறித்த நாடுகள் வேறு விதமாக சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை ட்ரம்ப் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாடுகள் அனைத்திற்கு தெரியும்.இஸ்ரேல் என்கின்ற ஒரு நாட்டிற்காக ட்ரம்ப் நடாத்துகின்ற போர் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்தப்போர் அமெரிக்காவை தொடர்ந்தும் பலவீனப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri