உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயம்.. தமிழ் பேசும் மக்களின் பொறுப்பு குறித்து செல்வம் எம்பி வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை விசாரித்த பின்பு சூடு பிடித்திருக்கிறது. தொடர்ந்து சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட பின்பு தொடரும் கைதுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை நாங்கள் வரவேற்கிறோம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று (13) ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மட்டுமல்ல, இவர்கள் எங்களுடைய போராட்டத்திலே மனித உரிமை மீறியவர்கள் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மோசமான விசாரணைகள்..
சுரேஷ் சலே உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சம்பந்தம் இருக்கின்ற ஒரு சூழலில் விசாரிப்பதற்காக கைது செய்யப்பட்ட பின்பு, அவருடைய விடுதலையையும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்ததாக கூறப்படுகின்ற விடயத்திலே, அவர் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்பு இனவாதிகள் கொஞ்சம் பேர் அவர்களைக் காப்பாற்றுவதற்கு துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் பேசுகின்ற நாங்கள் இவ்விடையத்தில், அமைதி காணக் கூடாத, அமைதி பேணக் கூடாது என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இவர்கள் எங்களுடைய தேசத்தின் அழிவை, இளைஞர்களுடைய விசாரணை என்ற பேரிலே மிக மோசமான விசாரணைகளை செய்தவர்கள் என்ற அடிப்படையில், ஒரு ஜனாதிபதி வெல்வதற்காக ஒரு சமூகத்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கிறிஸ்தவ சமூகம் மட்டு மல்ல, அந்தோனியார் தேவாலயத்தில் வழிபாட்டிற்குச் சென்ற அனைத்து மதத்தினரும் படுகொலை செய்யப்பட்டார்கள். அதன் பின்பு அவர் பல லட்சங்கள் வாக்குகளால் ஜனாதிபதியாக்கப்பட்டார்.
இது சந்தேகத்திற்கு இடமான நிலையிலே பேசப்படுகிற விடயம். அந்த சந்தர்ப்பங்களில் முஸ்லிம் தீவிரவாதிகள் இதில் பங்கு பெற்றுள்ளதாகச் சொல்லியிருந்தார்கள்.
ஆனால் விசாரணையின் பின் தான் தெரியும் என்ன இதில் இருக்கும் பின்னணி என்னவென்று தெரியும். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில், தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் அமைதி காக்கக் கூடாது" என குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாளில் 926 சந்தேகநபர்கள் கைது! நாடு முழுவதும் முடுக்கிவிடப்பட்ட விசேட போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம்