அரசாங்கத்தின் இரட்டை கண்ணோட்டம்: வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர்
வட பகுதியில் இருக்கும் கடற்தொழிலாளர்களை ஒரு கண்ணோட்டத்திலும், தென்பகுதியில் இருக்கும் கடற்தொழில் சமூகத்தை ஒரு கண்ணோட்டத்திலும் அரசாங்கம் பார்ப்பதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் குற்றம்சாட்டியுள்ளார்.
மன்னாரில் இன்றைய தினம் (11.10.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் கருத்து
அவர் மேலும் தெரிவிக்கையில், சில தினங்களுக்கு முன் நாட்டின் பிரதமர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கினார்.
இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடிக்க அனுமதி வழங்குவதற்கு அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாகவும், கடலில் மீன்கள் உள்ள இடங்களுக்கு சென்று மீன் பிடிக்கும் உரிமை கடற்தொழிலாளர்களுக்கு உள்ளது என்ற வார்த்தையையும் பயன்படுத்தி உள்ளார்.
பிரதமரின் கருத்துக்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய வருகையும், அவர்களால் மேற்கொள்ளப்படும் தொழில் முறையும் அவர்களினால் இங்கிருந்து சுரண்டிச் செல்லப்படும் கடல் வளங்களும் அதை விட கடல் சூழலை அழிக்கும் நடவடிக்கைகளை கண்டித்து நாங்கள் தொடர்ச்சியாக பல வருடங்களாக போராடி வருகிறோம்.
இவ்விடயங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும். குறிப்பாக வட பகுதியில் இருக்கும் கடற்தொழிலாளர்களை ஒரு கண்ணோட்டத்திலும், தென்பகுதியில் இருக்கும் தங்களுடைய கடற்தொழில் சமூகத்தை ஒரு கண்ணோட்டத்திலும் பார்த்து வருகின்றனர்.
இந்திய கடற்தொழிலாளர்கள்
வட பகுதி என்பது தமிழ் பேசும் மக்களை கொண்டதும், அது தமிழர்களின் பகுதி என்ற வகையில் இன்றைய அரசாங்கம் அதனை வகுத்துள்ளது.
நீர்கொழும்பில் அல்லது சிலாபத்தில் இந்திய கடற்தொழிலாளர்கள் தொழில் செய்வார்களாக இருந்தால் இந்த கருத்தை அவரால் தெரிவிக்க முடியுமா? அதனை அந்த மக்கள் அனுமதிப்பார்களா?
வளங்களை விற்று பணம் சம்பாதிக்கும் நோக்கத்தைத் தவிர அரசாங்கத்தின் செயல்பாடு அங்குள்ள மக்கள் வாழ்வதற்கானது இல்லை.
இங்கு வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்வாதாரம் இந்த ஒன்றில் தான் தங்கியுள்ளது. வேறு எந்த தொழில்களும் இல்லாமல் கடலை மட்டும் நம்பி கிட்டத்தட்ட 2 இலட்சம் கடற்தொழிலாளர்களும், அதனை சார்ந்த குடும்ப உறுப்பினர்களும் வட பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
