மட்டக்களப்பில் வெளிநாட்டு முகவர் கைது! போலி விமான சீட்டை வழங்கி மோசடி
மட்டக்களப்பில் கனடாவுக்கு அனுப்புவதாக 59 லட்சத்து 35 ஆயிரம் ரூபா வாங்கி கொண்டு போலி விமானச்சீட்டை வழங்கி மோசடியில் ஈடுபட்ட களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த போலி வெளிநாட்டு முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று (11.10.2023) புதன்கிழமை மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரிடம் முறைப்படு
மட்டு. தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஒருவரிடம் அவரை கனடா நாட்டுக்கு அனுப்புவதாக களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த போலி வெளிநாட்டு முகவர் ஒருவர் 59 இலச்சத்து 35 ஆயிரம் ரூபாவை வாங்கு கொண்டு இந்த அந்த அனுப்புவதாக இழுத்தடித்து வந்துள்ள நிலையில் கடைசியாக கனடாவிற்கான போலி விமான சீட்டை வழங்கி கனடாவிற்கு அனுப்பாது ஏமாற்றி வந்துள்ளார்.
இதனையடுத்து பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு போலி முகவருக்கு எதிராக மட்டு. மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரிடம் முறைப்படு செய்ததையடுத்து தலைமறைவாகியிருந்த போலி முகவரை விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் களுவங்கேணியில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 40 வயதுடையவர் எனவும் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
