நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான்: அஸ்வினை நீக்கிய இந்தியா
இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி தலைவர் ஷாகிதி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் 9 வது லீக் போட்டியானது Arun Jaitley மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டு, வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தற்போதைய நிலவரப்படி ஆப்கானிஸ்தான் 7 ஓவர்கள் முடிவில் 32 ஓட்டங்களை பெற்று ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.
முதலாம் இணைப்பு
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை இன்று (11.10.2023) எதிர்கொள்ள இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணியில் முக்கிய மாற்றம் ஒன்று நடக்கப் போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி சுழல் பந்து வீச்சாளரான அஸ்வினை நீக்கிவிட்டு வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு இசான் கிஷன் விளையாட இருக்கிறார்.
அதன்படி சென்னையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடியது. இதற்கு காரணம் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது மட்டும் தான்.
கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து
இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளருக்கு பதிலாக இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் வைத்து தான் விளையாடும் என தெரிகிறது.
இதனால் அஸ்வின் இன்றைய ஆட்டத்தில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை இந்திய அணி சேர்த்துக் கொள்ளும் என தெரிகிறது.
இந்த நிலையில் அஸ்வினை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் தான் பயன்படுத்துவதற்காக இந்திய அணி நிர்வாகம் அவரை சேர்த்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அஸ்வினுக்கு நீண்ட நாள் வாய்ப்பு கொடுத்தால் தான் அவருடைய முழு திறமையும் வெளியே வரும்.
ஆனால் அஸ்வினை அங்கொன்றும் இங்கொன்றும் போட்டிக்கு பயன்படுத்தினால் அது அவருடைய உத்வேகத்தை பாதிக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
