ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்
ஆப்கானிஸ்தானில் மீண்டும் 6.1 ரிச்டர் அளவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (11.10.2023) காலை 6.11 மணியளவில் ஹெராத் மாகாணத்தின் தலைநகருக்கு வெளியே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் தகவல் உடனடியாக வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்நிலையில்,ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 10,000 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என தெரிவிக்கப்படுவதுடன், மீட்புப்பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.
மேலும், சுமார் 20 கிராமங்களில் 1,983 முதல் 2,000 வீடுகள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகி உள்ளது. இந்நிலையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்நாடு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |