புத்தாண்டு சடங்குகளில் ஈடுபடவில்லை என ஜனாதிபதியை புகழவில்லை
தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்ட சடங்குகளை கடைபிடிக்கவில்லை என்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை புகழவில்லை என கொழும்பு பேராயர் அலுவலகத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு சடங்குகளை கடைபிடிக்கவில்லை என ஜனாதிபதியை புகழ்ந்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி பெய்யானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத விரோதத்தை ஊக்குவிக்க
கிறிஸ்தவர்களின் புனித வாரத்தின்போது, இயேசு கிறிஸ்துவின் துயரம் மற்றும் மரணத்தை நினைவுகூரும் நேரத்தில், யாரும் எந்தவொரு விழாவிலும் ஈடுபடக்கூடாது என்பதையே தாம் சொன்னதாகவும், அதனை ஜனாதிபதிக்கு பாராட்டாக சமூக ஊடகங்களில் தவறாக இணைத்திருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.
சமூக ஊடகங்களில் பரவும் அந்தக் கருத்தை நான் எப்போதும் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.
மத விரோதத்தை ஊக்குவிக்க முயற்சி செய்யும் சில தரப்புகள் இவ்வாறான பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்



