அரசுக்கு கடன் வழங்கும் சீனாவின் உள்நோக்கம் பற்றி தேட வேண்டும் - ஐ. மக்கள் சக்தி
சீனா இலங்கைக்கு அரசாங்கத்திற்கு கடன் வழங்கும் பின்னணியில் இருக்கும் உள்நோக்கம் என்ன என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைலவரின் செயலகத்தின் இன்று முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சீனா கடன் வழங்கிய பல நாடுகளிடம் அந்த கடனை திரும்ப பெற்றுக்கொள்வதற்காக அந்நாடுகளுக்கு சொந்தமான பெறுமதியான வளங்களுக்கு உரிமை கோருகிறது. சீனா, ஆபிரிக்காவில் சாம்பியா நாட்டுக்கே அதிகளவில் கடனை வழங்கியுள்ளது.
சம்பியாவில் தங்கம், வெங்கலம், வெள்ளி போன்ற உலோகங்கள், கனிமங்கள் இருக்கின்றன. கடனை சாம்பியாவால் திரும்ப செலுத்த முடியவில்லை. அதனை எங்களிடம் கூற வேண்டாம் என சீனா கூறுகிறது.
அதற்கு ஈடாக தங்கம், வெங்கலம், வெள்ளி கனிய வளங்களை தமக்கு வழங்குமாறு சீனா கூறுகிறது. சீனா எப்படி இந்த நாடுகளுக்கு உதவுகின்றது என்று ஒரு ஆய்வு கட்டுரை பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருந்தது. அந்த பத்திரிகை நான்கு நாடுகளை உதாரணமாக எடுத்திருந்தது.
அங்கோலா, சிம்பாப்வே, மொங்கோலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை அந்த பத்திரிகை உதாரணமாக எடுத்திருந்தது.
சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லாது, சீனாவிடம் சென்றால், அவர்களின் நிபந்தனைகளுக்கு அமையவே செல்ல வேண்டும். நிபந்தனைகள் இன்றி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாது.
சர்வதேச நாணய நிதியம் அந்தந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தொடர்பிலான நிபந்தனைகளையே விதிக்கும். எனினும் நாடுகள் தமக்கு தேவையாவற்றை பெற்றுக்கொள்வது உட்பட தனது நலன்சார்ந்த விடயங்களை தொடர்பான நிபந்தனைகளையே விதிக்கும் எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.