திண்மக்கழிவகற்றலுக்காக வருடாந்தம் செலவு செய்யப்பட்டு வந்த 36 மில்லியன் ரூபாவை செலவை நிறுத்தியுள்ளோம் - தவிசாளர் வினோ
திண்மக்கழிவகற்றலுக்காக வருடாந்தம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் 36 மில்லியன் செலவு செய்யப்பட்டு வந்துள்ளன.
அதனை நாம் நிறுத்திவிட்டு உக்காத கழிவுகளை மைதானங்களில் புதைத்து மைதானங்களையும் புனரமைப்பு செய்யும் நடவடிக்கைiயை ஆரம்பித்துள்ளோம்.
36 மில்லியன் ரூபா
என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் திண்மக் கழிவகற்றி மைதானங்களைப் புனரமைத்தல் செயற்றிட்டம் துறைநீலாவணைக் கிராமத்தில் செவ்வாய்கிழமை(16.06.2026) ஆரம்பித்து வைத்துகிட்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்..
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையை நாம் பொறுப்பேற்று ஒரு வருடம் கழிந்துள்ளது. அக்காலத்திற்குள் நாம் இப்பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டோம்.
திண்மக்கழிவகற்றல்
கடந்த ஒரு வருட காலத்திற்குள் 140 மில்லியன் ரூபாய் செலவில் இப்பிரதேசத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் கல்வி, கலை, கலாசாரங்கள், உள்ளிட்ட பல அபிவிருத்திகளை முன்னெடுத்திருந்தோம். நாம் முன்னெடுத்திருந்த திட்டங்கள் வெற்றியளித்துள்ளன.
கிராமங்களில் திண்மக்கழிவகற்றல் என்பது பாரியதொரு பிரச்சனையாகும். எனவே நாம் இப்பிரதேசத்தில் நாம் சேகரிக்கும் உக்கும் கழிவுகள். ஊக்காத கழிவுகள் என தரம் பிரித்து மைதானங்களில் உக்கும் கழிவுகளைப் புதைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

எமது பிரதேசத்திலிருந்து செங்கலடிப் கொடுவாமடு பகுதியில் அமைந்துள்ள கழிவுகளைச் சேகரிக்கும் நிலையத்திற்கு கொண்டு வழங்குவதற்கு வருடாந்தம் 36 மில்லியன் ரூபாய் எமது பிரதேச சபையினால் செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி இனிமேல் செலவு செய்யப்படாமல் மைதானங்களில் உக்காதா கழிவுகளைப் புனரமைக்கும் நடவடிக்கையை நாம் முன்நெடுத்துள்ளோம்.
அதன் முதற்கட்டம் துறைநீலாவணையில் ஆரம்பிக்கப்படடுள்ளது. என அவர் இதன்போது தெரிவித்தார்.
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam