நாங்கள் திவாலாகும் நிலைக்கு வந்துவிட்டோம் - பிரதமர் அறிவிப்பு
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படக் கூடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பயிர்ச்செய்கைக்கான உரம் இல்லை எனவும், இதனால் நெல் சாகுபடி பருவத்தில் முழு உற்பத்தியும் இருக்காது என்றும் அவர் கவலை தெரிவித்தள்ளார். எனவே ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
மேலும், இந்த நேரத்தில் உலகளாவிய உணவு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு "கடந்த நிர்வாகமே காரணம்" என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
"நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் - இலங்கையில் முன்பு ஒருபோதும் இவ்வாறு நடக்கவில்லை என்று அவர் கூறினார்.
எங்களிடம் டொலர் இல்லை, ரூபாவும் இல்லை. நாங்கள் தற்போது நிலையான நிலையில் இல்லை. மக்களால் இனியும் சுமையை தாங்க முடியாது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
You My Like This Video