நாங்கள் கண்காட்சி அரசியலை நம்புவதில்லை
ஐக்கிய மக்கள் சக்தி நாட்டுக்கு பெறுமதியை சேர்க்கும் அரசியல் கட்சியே அன்றி கண்காட்சி அரசியலை நம்பி வாழும் கட்சியல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டம் திவுலப்பிட்டிய அதிகார சபைக் கூட்டத்தில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம் அன்று முதல் தற்போது வரை மாயைகளின் பின்னால் ஓடுகிறது. நான் உட்பட எமது கட்சியினர் விஞ்ஞானப்பூர்வமாக விடயங்களை எடுத்துரைக்கும் போது அரசாங்கம் பரிகாசமாக சிரித்தது.
தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வாருங்கள் என அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து கோரிக்கை விடுத்த போது, அரசாங்கம் மூட நம்பிக்கைகளின் பின்னால் சென்றது. அதன் பலாபலன்களையே நாடு தற்போது அனுபவித்து வருகிறது.
அபிவிருத்தியில் பல பிரிவுகள் இருக்கின்றன. அதில் ஒன்றை பிடித்துக்கொண்டு எதிரணிகள் ஐக்கிய மக்கள் சகதியின் வேலைத்திட்டங்களை விமர்சித்து வருகின்றன.
இவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் வாய் பேச்சில் வல்லுநர்கள்.வேலைகளை செய்பவர்கள் அல்ல எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடடுள்ளார்.