அரசாங்கத்திற்கு தேவையான வகையில் அரசியல் செய்ய முடியாது! நாமல்
அநுர அரசாங்கத்திற்கு தேவையான வகையில் அரசியல் செய்ய முடியாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம்
தமது கட்சி மக்களுடன் மட்டுமே அரசியல் செய்வதாகவும் தற்பொழுது பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பொதுஜன முன்னணியுடன் இணைந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நிதி அமைச்சின் செயலாளரினால் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சமர்ப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகள் உள்ளடங்கிய வரவு செலவுத் திட்டத்தை அவரை விடவும் சிறந்த முறையில் இந்த அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
