கொழும்பில் திறக்கப்படவுள்ள மெழுகுச் சிலை அருங்காட்சியகம்!
உள்நாட்டு மற்றும் சர்வதேச புகழ்பெற்ற பிரமுகர்களின் மெழுகுச் சிலைகளைக் கொண்ட அருங்காட்சியகம் ஒன்று கொழும்பில் திறக்கப்படவுள்ளது.
கொழும்பு சுதந்திர சதுக்க ஆர்கேட் (Arcade-Independence Square ) தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த அருங்காட்சியகம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திறக்கப்படவுள்ளது.
இலங்கையின் பிரபலங்கள்
அருங்காட்சியகத்தில் இலங்கையின் பிரபலம் வாய்ந்த முக்கியஸ்தர்கள், ஹொலிவூட் திரை நட்சத்திரங்கள், பொலிவூட் திரை நட்சத்திரங்கள், விளையாட்டுத்துறை பிரபலங்கள், சர்வதேச தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் சிலைகள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.
ஆரம்ப கட்டத்தில் குறித்த மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் சுமார் 40 சிலைகள் நிர்மாணிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
அதன் பின்னர் படிப்படியாக ஏனைய சிலைகள் நிறுவப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








