நீரின் பயன்பாடு தொடர்பில் நுகர்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தற்போதைய வறண்ட காலநிலையை கருத்தில் கொண்டு நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் நுகர்வோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய வானிலை காரணமாக நீர் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நீர் நுகர்வு
அந்த அறிக்கையில், இந்த நாட்களில் நிலவும் மிகவும் வறண்ட வானிலை காரணமாக, நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருகின்றது. வெப்பம் காரணமாக மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக உள்ளது.

குடிநீர் விநியோகம் குறைவாக இருப்பதால், அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கும் சமமாக விநியோகிக்கப்பட வேண்டும்.
பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
எனவே, வாகனங்களை கழுவுதல், தோட்டக்கலை போன்ற நடவடிக்கைகளுக்கு நீரை பயன்படுத்துவதை குறைத்து, தேவையான அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலைகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது என்றும், இந்த நேரத்தில் பாதுகாப்பான குடிநீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வாரியம் நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri