மட்டக்களப்பில் வறிய குடும்பங்களுக்கான குடிநீர் விநியோகம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி மற்றும் அம்பந்தனாவெளி ஆகிய பகுதிகளில் மிகவு வறிய நிலையில் உள்ள குடிநீரைப்பெற்றுக்கொள்ள சிரமங்களை எதிர்கொண்ட குடும்பங்களுக்கான குடிநீர் விநியோகம் வழங்கும் நிகழ்வு இன்று(16) நடைபெற்றது.
சுவிஸ் உதயம் அமைப்பிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த குடிநீர் திட்டங்கள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
குடிநீர் திட்டம்
புலம்பெயர் நாட்டை சேர்ந்த ஒருவரால் இந்த குடிநீர் திட்டத்திற்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு கிழக்கு சுவிஸ் உதயம் அமைப்பின் உப செயலாளர் நடனசபேசன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது குடிநீர் விநியோக திட்டங்கள் பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இதேபோன்று கதிரவெளி பகுதியில் உள்ள மாணவர்களின் நன்மை கருதி ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களும் கதிரவெளி பத்திரகாளியம்மன் ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கிவைக்கப்பட்டது.










ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
