நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகம் பாதிப்பு
நாடு முழுவதும் நிலவும் வறண்ட வானிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
நீர் மட்டம் வேகமாகக் குறைந்து...
நிலவும் வறண்ட வானிலை காரணமாக நீர்த்தேக்கங்கள் மற்றும் பிற நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் நீர் நுகர்வு மற்றும் குறைந்த அளவிலான விநியோகம் காரணமாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை பொதுமக்களை தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், நிலவும் வறண்ட வானிலை காரணமாக மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சாரசபை (CEB) தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |